2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு

A.P.Mathan   / 2014 ஜூலை 30 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை மிக அதிகமாக கொண்டுள்ளது. 445 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடி வரும் இந்தியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் ஷிகார் தவான் 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 
 
பந்துவீச்சில் மூயேன் அலி 2 விக்கெட்களையும், ஜோ ரூட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 
 
தமது முதல் இன்னிங்சை இந்தியா அணி 330 ஓட்டங்களுடன் நிறைவு செய்தது. டோனி 50 ஓட்டங்களையும், அஜின்கையா ரெஹானே 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன் 5 விக்கட்களையும் ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களையும், மூயேன் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
இங்கிலாந்து அணி தமது இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்று தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தி இந்திய அணிக்கு 445 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இதில் அலிஸ்டயர் குக் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும், ஜோ ரூட் 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவீந்தர் ஜடேஜா 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
  
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 567 ஓட்டங்களைப் பெற்று தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. இதில் இயன் பெல் 167 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 156 ஓட்டங்களையும், அலஸ்டியர் குக் 95 ஓட்டங்களையும், தனது முதற்ப் போட்டியில் விளையாடும் ஜோஸ் பட்லர் 85 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களையும், ரவீந்தர் ஜடேஜா 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .