2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ரொஜெர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீர, வீராங்கனைகள் தோல்வி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் நடைபெற்ற ரொஜெர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் ஜோ வில்பிரட் சொங்கா மற்றும் அகிநெஸ்கா ரட்வன்ஸ்கா ஆகியோர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  

ஜோ வில்பிரட் சொங்கா, சுவிற்சர்லாந்தின் ரொஜர் பெடரரை 7இற்கு 5, 7 இற்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுக்கொண்டார். ATP உலக தொடரில் சொங்கா வெற்றி பெற்றுள்ளமை இந்த பருவகாலத்தில் இதுவே முதற் தடவையாகும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் 11 தடவைகள் வெற்றி பெற்றுள்ளார். 
 
மகளிருக்கான போட்டியில் போலந்து நாட்டை சேர்ந்த அகிநெஸ்கா ரட்வன்ஸ்கா, அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்சை 6 இற்கு 4, 6 இற்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த வருடத்தில் அவர் பெற்றுள்ள முதல் சம்பியன் பட்டம் இதுவாகும். 
 
பல முன்னணி வீர வீராங்கனைகள் இந்த தொடரில் பங்குபற்றிய போதும் அவர்கள் தோல்விகளை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X