2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இந்தியா அணிக்கு இரண்டாவது வெற்றி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி இலகுவான வெற்றியைப் பெற்று தொடரில் 2 இற்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து நொட்டிங்க்ஹாமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பாடிய இங்கிலாந்த அணி நல்ல ஆரம்பத்தை எடுத்த போதும்   இந்திய அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் அல்ஸடையர் குக் 44 ஓட்டங்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ். ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 42 ஓட்டங்களையும் பெற்றனர்.  பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்களை கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அம்பாத்தி ராயுட ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும், அஜிங்கையா ரெஹானே 45 ஓட்டங்களையும்,  சுரேஷ் ரைனா 42 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவு செய்யப்பட்டார். 
 
ஐந்து போட்டிகள் அடங்கிய தொடரில் 3 போட்டிகள் நிறைவைடந்த நிலையிலேயே இந்தியா அணி இரண்டு வெற்றிகளைப் பெற்று தொடர் தோல்வியில் இருந்து தப்பித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .