2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இந்தியாவுக்கு அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர் டோனி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திரா சிங் டோனி, இந்திய அணிக்காக கூடுதலான ஒருநாள் சர்வதேசப் போட்டி வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த தலைவர் என்ற சாதனையை நேற்றைய தினம் இங்கிலாந்து அணியை வென்றதன் மூலம் ஏற்படுத்தியுள்ளார். 
 
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அசாருதீன் இந்தியா அணிக்காக 90 ஒருநாள் சர்வதேசப் போட்டி வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இருந்தார். 174 போட்டிகளுக்கு தலைமை தாங்கி இந்த சாதனையை அசாருதீன் ஏற்ப்படுத்தி இருந்தார். டோனி 161 போட்டிகளில் தலைமை தாங்கி 90 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகளாவிய ரீதியில் ஆறாவது இடத்தில் இருக்கும் டோனி 100 வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் போது முதலாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுக் கொள்வார். 
 
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர்கள் ரிக்கி பொன்டிங் 165 வெற்றிகளையும், அலன் போர்டர் 107 வெற்றிகளையும் பெற்று அணித் தலைவர்களாக கூடுதலான வெற்றிகளைப் பெற்றுள்ள முதலிருவர்கள் ஆக திகழ்கின்றனர். 
 
இந்திய அணிக்காக கூடுதலான டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியவர் என்ற சாதனையும், கூடுதலான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர் என்ற சாதனையும் டோனி வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .