2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சம்பியன் லீக் போட்டிகளில் லாகூர் லயன்ஸ், நோர்தன் டிஸ்ட்ரிக் அணிகளுக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன் லீக் போட்டி தொடரின் தெரிவுப் போட்டிகளில் நோர்தன் டிஸ்ட்ரிக் அணியும், லாகூர் லயன்ஸ் அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. 
 
சீரற்ற வானிலை காரணமாக நோர்தன் டிஸ்ட்ரிக், சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி 10 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதில் முதலில் துடுப்பாடிய சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 92 ஓட்டங்களைப் பெற்றது.குஷால் பெரேரா 37 ஓட்டங்களையும், தனுஸ்க குணதிலக 39 ஓட்டங்களையும் பெற்றனர். ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 
 
பதிலுக்கு  துடுப்பாடிய நோர்தன் டிஸ்ட்ரிக் அணி 9.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 96 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் கேன் வில்லியம்சன் 52 ஒட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் பர்வீஸ் மஹ்ரூப் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 
மும்பை இந்தியன்ஸ், லாகூர் லயன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் முதிலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களைப் பெற்றது. ஆதித்தியா தாரே 37 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஐஸ்சாஸ் சீமா, வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய லாகூர் லயன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும், அஹமட் செஷாட் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.  பிரகஜன் ஓஜா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .