2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சுனில் நரையன், பந்தை வீசி எறிவதாக முறையீடு

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 30 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகளின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரையன், பந்தை விதிமுறைகளை தாண்டி வீசி எறிவதாக சம்பியன் லீக் தொடரில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியின் நடுவர்கள் அவரின் பந்துவீச்சு மீது சந்தேகம் இருப்பதாக முறையீடு செய்துள்ளனர். கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிக்காக சம்பியன் லீக் தொடரில் சுனில் நரையன் விளையாடி வருகின்றார். நேற்று நடைபெற்ற டொல்பின்ஸ் அணியுடனான போட்டியின் போது வேகமாக துடுப்பாட்ட வீரர்களை நோக்கி வரும் பந்துகளை வீசும் போதே குறித்த சந்தேகம் எழுந்துள்ளதாக போட்டியின் நடுவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதன்படி அவர்  போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியும். ஆனாலும் இன்னொரு முறை இவ்வாறு குற்றம் சாட்டப் பட்டால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  சபைக்கு உட்பட்ட போட்டிகளில் பந்து வீச முடியாத படி தடைசெய்யப்படுவார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  சபையின் உதவியுடன் தொடர்ந்து சம்பியன் லீக் தொடரில் விளையாட முடியும். 
 
சம்பியன் லீக் போட்டிகளில் இவ்வாறு முறையீடு செய்யப்பட்டுள்ளமையால் சர்வதேசப் போட்டிகளிலும் முறையீடு செய்யப்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இந்த தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் ஹபீஸ் நேற்று முன் தினம் இவ்வாறு முறையீடு செய்யப்பட்டுள்ளார். இரண்டு சம்பவங்களிலும் சிறந்த நடுவர் விருதை வென்ற இலங்கையின் குமார் தர்மசேனா சம்மந்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .