2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இந்திய அணி அறிவிப்பு

George   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களின் பெயர் விபரங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன.

தோனி, ஷிகர் தவான், அஜிங்கிய ரகானே, விராத் கோலி, அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, மோகித் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் ஆகியோர் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் . இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்ற கர்ன் சர்மா இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக ரோகித் சர்மாவுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதுடன் அஸ்வினுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு இருபது தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடிய குல்தீப் யாதவ் மாத்திரம் இந்திய அணியில் புதிதாக இடம்பெற்றுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .