2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

Lenin Raj   / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (06) மாலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நுவரெலியாவிற்குச் சென்று ஹட்டன் வழியாக கொழும்பிற்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

லொறி சுமார் 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .