2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சம்பியன் லீக் தொடரில் சென்னை சம்பியன்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 04 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடைபெற்ற சம்பியன் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணியை வெற்றி பெற்று சம்பியன் ஆகியுள்ளது. 
 
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கௌதம் கம்பீர் 80 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா 39 ஓட்டங்களையும், மானிஷ் பாண்டி 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பவான் நேஜி 22 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்களை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவின் சதம் மூலம் இலகுவாக  8 விக்கெட்களினால்  வெற்றியைப் பெற்றுக் கொண்டது. 18.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பெற்றது. இதில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும், பிரண்டன் மக்கலம் 39 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
போட்டியின் நாயகனாக பவான் நேஜி தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தொடர் நாயகனாக சுரேஷ் ரெய்னா தெரிவு செய்யப்பட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .