2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இந்தியா - மே.இந்திய போட்டி புயலினால் ரத்து

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14ஆம் திகதி இந்த போட்டி நடைபெறவிருந்த நிலையில் போட்டி நடைபெறவிருந்த விசாகப்பட்டினத்தில் புயல் அபாயம் உள்ள நிலையில் இந்த போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினதிற்கான விமானங்கள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இரு அணிகளும் டெல்லியிலேயே தங்கி இருக்கின்றன. இரு அணி முகாமைத்துவங்களும் நிலைமைகளை அறிந்துள்ள நிலையில் நான்காவது போட்டிக்காக தர்மசாலாவிற்கு செல்லவுள்ளன. இரு தினங்கள் மாத்திரம் உள்ள நிலையில் வேறு இடத்தில் போட்டிகளை ஏற்ப்பாடு செய்வது கடினம். எனவே போட்டி கைவிடப்பட்டுள்ளது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. 
 
5 போட்டிகள் அடங்கிய தொடரில் முதற் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணியும் இரண்டாவது போட்டியில் இந்தியா அணியும் வெற்றி பெற்று தொடரை சமநிலையில் வைத்துள்ளன. இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 48 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது. இதில் விராத் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். டோனி ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜெரோம் டெய்லர் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 46.3 ஓவர்களில் 215 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் டுவைன் ஸ்மித் 97 ஓட்டங்களையும், கெரோன் பொலார்ட் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் சமி 4 விக்கெட்களையும், ரவீந்தர் ஜடேஜா 3 விக்கட்களையும் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .