A.P.Mathan / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர் ஒன்றை 2015ஆம் ஆண்டு இலங்கையில் நடாத்தமுடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்க்கால நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த தொடர் இல்லாத போதும், மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய தொடரை இடை நடுவே முறித்துக்கொண்டதையடுத்து இலங்கை அணி 5 போட்டிகள் அடங்கிய தொடரில் சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே இதை சாதகமாக பாவித்து இந்தியாவிடம் இலங்கை குறித்த டெஸ்ட் தொடரில் பங்குபற்ற கோரியுள்ளது. பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப கட்டம் என்ற நிலையில் உறுதியான முடிவுகளை எதனையும் கூறமுடியாது என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இலங்கை அணி 2015ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கிரிக்கெட் தொடர் ஒன்றிற்கு செல்லவுள்ளது. அதற்கு முன்னர் இலங்கையில் விளையாடவே இலங்கை திட்டம் வகுத்துள்ளது. 1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago