2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்திய டெஸ்ட் அணியில் அக் ஷர் பட்டேல்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா, தோள்பட்டை காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக 21 வயதாகும் இளம் சுழல் பந்துவீச்சாளரான அக் ஷர் பட்டேல் இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியோடு அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற ரவீந்திர ஜடேஜா, ஒரேயொரு பயிற்சிப் போட்டியில் மட்டுமெ விளையாடியிருந்தார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் ஆற, சில வாரங்கள் அவர் ஓய்விலிருப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் தற்போது நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு முன்னதாக அவர் காயத்திலிருந்து பூரண குணம் அடைவது அவசியம் என்பதால், அவரை ஓய்வில் இருக்கச்செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்குப் பதிலாக தற்போது அணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் அக் ஷர் பட்டேல், இதுவரை இந்தியாவுக்காக 9 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இவரது பந்துவீச்சுப் பெறுதி மிகச்சிறப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .