2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஒலிம்பிக்கில் விளையாட நோர்வே மகளிர் அணி தகுதி

George   / 2015 ஜனவரி 04 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய மகளிர் ஹென்ட்போல் சம்பியனான நோர்வே அணி பிரேஸிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது. ஹங்கேரியின் தலைநகரமான  புடாபெஸ்டில் ஐரோப்பிய மகளிர் ஹென்ட்போல் சம்பியன்  போட்டி நடைபெற்றது.  

சுவீடன் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்ற நோர்வே  ரியோ 2016 இல் விளையாடும் முதல் அணியாகத் தேர்வானது. போட்டியின் முதல் பாதியில் 12:10 என சுவீடன் முன்னிலை வகித்தது.   

இரண்டாவது பாதியில எழுச்சிகண்ட நோர்வே 28: 25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. ஐரோப்பிய மகளிர் கைபந்து சம்பியனான நோர்வே தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது. இலண்டன் ஒலிம்பிக்கில் நோர்வே மகளிர் அணி வெண்கலப்பதக்கம் பெற்றது. 

ஐரோப்பிய மகளிர் கைபந்து சம்பியன் போட்டியில்  14  ஐரோப்பிய நாடுகள் விளையாடின. ஐரோப்பிய சம்பியனான நோர்வேயும், போட்டியை நடத்தும் பிரேஸிலும் மகளிர் ஹென்ட்போல் போட்டியில் விளையாடத்  தகுதி பெற்றுள்ளன. தகுதிகாண் போட்டிகளின் மூலம் மேலும் 8 நாடுகள் தெரிவு செய்யப்படவுள்ளன. 

ஆண்களுக்கான ஹென்ட்போல் சம்பியன் போட்டி இம்மாதம் 15 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வரை கட்டாரில் நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .