2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

உலகக் கிண்ண இலங்கை அணி

A.P.Mathan   / 2015 ஜனவரி 07 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் குறிப்பிடத்தக்க பெரியளவு மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 

உபாதைக்கு சத்திர சிகிச்சை செய்துள்ள வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உடற் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைக்கப்பட்டுள்ளார். 

அண்மைக்காலமாக அணியில் சரிவர இடம் வழங்கப்படாமல் இருந்த நுவான் குலசேகர, அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்த தினேஷ் சந்திமால், அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ஷமிந்த எரங்க, அணியில் இணைக்கப்பட வாய்ப்புகள் இருந்தபோதும் அவரின் இடத்தை குலசேகர பெற்றுள்ளார். மஹேல ஜெயவர்தன, ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே களமிறங்குவார் என நம்பப்படுகின்றது. திமுத் கருணாரத்ன, அணியில் மேலதிக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இணைக்கப்பட்டுள்ளார். 

ரங்கன ஹேரத், சசித்திர சேனநாயக்க இருவரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இருவரில் ஒருவருக்கே அநேகம் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கும். இலங்கை அணி 5 துடுப்பாட்ட வீரர்கள், 2 சகலதுறை வீரர்கள், 1 சுழல்ப் பந்துவீச்சாளர், 2 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற நிலையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

அணி விவரம்
அஞ்சலோ மத்தீவ்ஸ் (தலைவர்), திலகரத்ன டில்ஷான், குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, லஹிரு திரிமன்ன (பிரதித் தலைவர்), டினேஷ் சந்திமால், டிமுத் கருனாரத்ன, ஜீவன் மென்டிஸ், திஷர பெரேரா, சுரங்க லக்மால், லசித் மலிங்க, தம்மிக்க பிரசாத், நுவான் குலசேகர, ரங்கன ஹேரத், சசித்ர சேனாநாயக்க.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .