2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மேற்கிந்திய உலகக் கிண்ண அணி

A.P.Mathan   / 2015 ஜனவரி 12 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை உலகக் கிண்ணத்தில் பங்குபற்றவுள்ள தனது அணியை தெரிவு செய்துள்ளது. இதில் அவர்களின் இரண்டு முக்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் வீரர்களான டுவைன் பிராவோ, கெரோன் பொலார்ட் ஆகிய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியுடனான தொடரின் இடை நடுவே விலகியமை அடங்கலாக மேற்கிந்திய கிரிக்கெட் சபையின் பல பிரச்சினைகளுக்கு இவர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

பந்துவீச்சு சர்ச்சைகளில் மாட்டிவிடக்கூடாது என சர்வதேசப் போட்டிகளில் விளையாடாமல் இருந்த சுனில் நரையன் அணிக்குள் வந்துள்ளார். உலகக் கிண்ண தொடரில் இவரின் பந்துவீச்சு தொடர்பாக முறையீடு செய்ய வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு முறையீடு செய்யப்பட்டால் 21 நாட்களுக்கு விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கும். அதற்குள் சோதனை செய்து பந்துவீச்சு விதிமுறைக்கு உட்பட்டதாக இருக்கின்றது என்பதை நிரூபிக்க வேண்டும். சம்பியன் லீக் தொடரில் இரு தடவைகள் முறையீடு செய்யப்பட்டு இவர் தடைசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. சொந்தக் காரணங்களுக்காக அணியில் இருந்து தானாகவே விலகிய டரின் பிராவோ அணியில் மீண்டும் இணைந்துள்ளார். 

அணியின் விபரம் 
ஜேசன் ஹோல்டர் (தலைவர்), மார்லன் சாமுவேல்ஸ், சுலைமான் பென், டரின் பிராவோ, ஜொனதன் காஸ்டர், செல்டன் கொட்ரேல், க்றிஸ் கெயில், சுனில் நரையன், தினேஷ் ராம்டின், கிமர் ரோச், அன்றே ரசல், டரென் சமி, லென்டி சிமொன்ஸ், டுவைன் ஸ்மித், ஜெரோம் ரெய்லர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .