2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இலங்கைக்கு அதிரடி வெற்றி

A.P.Mathan   / 2015 ஜனவரி 15 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி அபாரமாக வெற்றியீட்டியது. நியூசிலாந்து செட்டொன் பார்க், ஹமில்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பிரன்டம் மக்கெலம், 99 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டங்கள், 12 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 117 ஓட்டங்களைக் குவித்தார்.  

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சசித்ர சேனாநாயக்க மற்றும் ரங்கண ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நுவான் குலசேகர மற்றும் ஜீவன் மென்டிஸ் ஆகியோர் தலா 1  விக்கெட்டினையும் கைப்பற்றினர். இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் நான்கு வீரர்கள் ரன் அவுட்டாகியமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, 47.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் திலகரட்ண டில்ஷான் 116 ஓட்டங்களை பெற்றார். இது அவரது 19ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி சதமாகும். 

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர் சார்பில் மட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும், அடம் மில்னே மற்றும் நதன் மக்கல்லம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக திலகரட்ண டில்ஷான் தெரிவானார். 

இந்த வெற்றியின் மூலம், 7 போட்டிகள் அடங்கிய தொடரில் 1 இற்கு 1 என இரு அணிகளும் சமநிலையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .