George / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹெமில்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை(15) ஆரம்மபமான மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்கா – ஸிம்பாவே அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாவே அணி, களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.
முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 50 ஒவரில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ஓட்டங்களை குவித்தது.
தென்னாபிரிக்கா சார்பாக மில்லர் 92 பந்துகளுக்கு 7 நான்கு ஓட்டங்கள், 9 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 138 ஓட்டங்களை குவித்தார்.
அவ்வணியின் டுமினி, 3 ஆறு ஓட்டங்கள், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 115 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
ஆட்ட நிறைவின்போது மில்லர் மற்றும் டுமினி ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
340 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய ஸிம்பாவே அணி, 48.2 ஓவர்களில் 277 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago