A.P.Mathan / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ணத்தொடரின் இன்றைய போட்டியில் சிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் விளையாடியிருந்தன.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் துடுப்பாட்டவீரர்கள் நிதானமாகவும் பொறுப்பாகவும் துடுப்பெடுத்தாடினர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் பிறந்த வீரர்களைக் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சிம்பாப்வேயின் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாகவே அமைந்தது.
ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, 7 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றது. சய்மான் அன்வர் 50 பந்துகளை எதிர்கொண்டு 67 ஓட்டங்களையும், குர்ராம் கான் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
சிம்பாப்வேயின் சதாரா 3 விக்கெட்களையும், சொலமன் மைரே, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பெரியதொரு எண்ணிக்கையை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணிக்கு அவர்களது சிறப்பான இணைப்பாட்டங்கள் கைகொடுத்தன.
ஆரம்ப ஜோடியான சிக்கந்தர் ராஸா (46 ஓட்டங்கள்), சகப்வா (35 ஓட்டங்கள்) இருவரும் 64 ஓட்டங்களை எடுத்து நல்ல துவக்கத்தை அளித்தனர். மஸகட்ஸா ஒரு ஓட்டத்துடன் வெளியேறினாலும், டெய்லர், சீன் வில்லியம்ஸ் இணை அபாரமாக விளையாடியது. டெய்லர் 47 ஓட்டங்களையும், சீன் வில்லியம்ஸ் 76 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் கிரேய்க் எர்வின் 32 பந்துகளில் 42 ஓட்டங்களை அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
48 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது சிம்பாப்வே அணி. போட்டியின் நாயகராக சீன் வில்லியம்ஸ் தெரிவானார்.
தென்னாபிரிக்காவுடனான முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருந்த சிம்பாப்வே அணிக்கு, இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகள் கிடைத்துள்ளன.
19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago