2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மேற்கிந்திய பயிற்றுவிப்பாளராக பில் சிமன்ஸ்

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக அந்த அணியின் முன்னாள் வீரரும், அயர்லாந்து அணிக்காக 7 வருடங்களாக பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றிவரும் பில் சிமன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

உலகக் கிண்ண தொடர் நிறைவடைந்ததும் சிமன்ஸ் பதவியினை பொறுப்பேற்கவுள்ளார். தற்போது மேற்கிந்திய தீவுகள் பயிற்றுவிப்பாளர் இன்றியே உலகக்கிண்ண தொடரில் விளையாடி வருகின்றது. 

51 வயதான சிமன்ஸ், அயர்லாந்து அணிக்கு சிறப்பான சேவைகளை ஆற்றி வருகின்றார். 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஆரம்பித்த அவருடைய 2 வருட ஒப்பந்தம் நிறைவடைய முன்னர் அவர் தனது நாட்டு அணியுடன் இணையவுள்ளார். 

பில் சிமன்ஸ் உடன் இணைந்து உதவிப் பயிற்றுவிப்பாளராக ஸ்டுவோர்ட் வில்லியம்ஸ், அணி முகாமையளாரக ரிச்சி ரிச்சட்சன், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் கேர்ட்லி அம்ரூஸ் ஆகியோர் தங்களுக்கான பதவிகளை பொறுப்பேற்கவுள்ளனர். ஏப்ரல் 6ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இங்கிலாந்து தொடரில் இவர்கள் தங்கள் பதவிகளுக்கான வேலைகளை ஆரம்பிக்கவுள்ளனர். 

சகலதுறை வீரரான பில் சிமன்ஸ் 26 டெஸ்ட் போட்டிகளில் 1,022 ஓட்டங்களையும், 22 விக்கெட்களையும் பெற்றுள்ளார். அதேவேளை 143 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3,675 ஓட்டங்களையும், 83 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .