George / 2015 மார்ச் 09 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி மிக மோசமாக தடுமாறி வருகின்றது. இந்த நிலையில் காலிறுதி வாய்ப்பை இழந்து, முதல் சுற்றோடு வெளியேறும் பட்சத்தில் அணியில் அதிரடியாக முக்கிய மாற்றங்கள் நிகழும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பயிற்றுவிப்பு குழாம் மாற்றப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன. இல்லாவிடின் அணியின் தலைமைத்துவம் மற்றும் சிரேஸ்ட வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்படுகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர், பதவி மாற்றம் இடம்பெறவுள்ளது. இந்த மாற்றம் கூட அணியில் மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
புதிய தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள கொலின் கிரேவ்ஸ் அணியில் மாற்றங்களை ஏற்படுத்தி அணியை மீள கட்டி எழுப்ப முனைவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மீண்டும் கெவின் பீட்டர்சன் அணிக்குள் வரும் நிலையும் உள்ளதாக கூறப்படுகின்றது. கொலின் கிரேவ்ஸ், பீடேர்சனுடன் இது தொடர்பாக பேசியுள்ளதாகவும் உறுதிப்படுத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தின் முதற்தர போட்டிகளில் கெவின் பீட்டர்சன் விளையாடினால் அணியில் அவர் இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில் லெய்ஸ்ட்டெஸ்ஷேர் கழகம் கெவின் பீட்டர்சனை 20 - 20 போட்டிகளில் விளையாட அழைத்துள்ளது. இருப்பினும் அவர் ஏற்கனவே விளையாடிய சரே கழகமும் இன்னும் அவருடன் நட்பாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
2 hours ago