2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இலங்கை அணியின் மனோவியல் நிபுணர் பதவி தொடர்கிறது

A.P.Mathan   / 2015 மார்ச் 15 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனோவியல் நிபுணர் ஜேர்மி சினப்ஸ், உலகக்கிண்ண தொடர் முடிவடையும் வரை இலங்கை அணியுடன் இணைந்து செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த இவர் உலகக்கிண்ண தொடரின் ஆரம்ப போட்டிகளில் அணியுடன் இணைந்து இருந்து செயற்படும் விதமாகவே இணைக்கப்பட்டார். அவரின் பங்களிப்பு அணிக்கு உளவியல் ரீதியில் முன்னேற்றத்தை தந்துள்ளமையினால் ஜேர்மி சினப்ஸின் ஒப்பந்தத்தை உலகக்கிண்ணம் முடியும் வரை இலங்கை கிரிக்கெட் நீடித்துள்ளது. 

முக்கிய போட்டிகளில் இலங்கை அணி சரியாக விளையாட முடியாமல் தடுமாறி வருகின்றது. குறிப்பாக இறுதிப்போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வருகின்றது. அதனை தவிப்பதற்காக இந்த நடவடிக்கையை இலங்கை கிரிக்கெட் செய்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணியுடன் பணிபுரிவது சிறப்பாக உள்ளது. அவர்கள் நல்ல மதிப்பை தருகின்றனர். அவர்கள் தனித்துவமான பலக்கவழக்கங்களையும் மொழியையும் கொண்டுள்ளனர். சிரேஷ்ட வீரர்கள் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகின்றனர். சிலர் சாதரணமாகவே பேசுகின்றனர். சிரேஸ்ட வீர்களின் உதவியுடன் மற்ற வீரர்களுடன் பேசக்கூடியதாக உள்ளது. குமார் சங்ககார, சனத் ஜெயசூரியா போன்றவர்களுடன் பேசியுள்ளேன். அவர்கள், வீரர்களின் நிலை குறித்து கூறியுள்ளனர். அவற்றை வைத்து வீரர்களுடன் கதைத்து அவர்களுடன் சிரேஸ்ட வீரர்கள், இளைய வீரர்கள் அனுபவ பகிர்வை செய்து வருகின்றனர் என ஜேர்மி சினப்ஸ் தெரிவித்துள்ளார். 

கஷ்டமான விடயங்களை இலகுவாக்குவது எவ்வாறு? கடினமான போட்டிகளின் போது வீரர்கள் முடிவுகளை இலகுவாக எடுத்து இலகுவாக எவ்வாறு போட்டியை மாற்றுவது, 100 வீதம் குழப்பமில்லாத முடிவுகளை எடுப்பது போன்ற விடயங்களை ஜேர்மி சினப்ஸ் அணிக்கு ஆலோசனையாக வழங்கி அணி வீரர்களின் மன நிலையை மேம்படுத்தி வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .