Thipaan / 2015 மார்ச் 15 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்திய தீவுகள் அணி, ஐக்கிய அரபு இராச்சிய அணியை வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.
இதேவேளை, தற்சமயம் நடைபெற்று வரும் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி மூன்றாமிடத்தைப் பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்புக்கள் உள்ளன.
தென் ஆபிரிக்கா அணி இரண்டாமிடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நடைபெறும் போட்டியில் அதிக வித்தியாசத்தில் ஓர் அணி வெற்றி பெற்றால் மாத்திரமே அவர்கள் மூன்றாமிடத்தைப் பெறும் வாய்ப்புகள் உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நான்காமிடம் உறுதியாகியுள்ள நிலையில், அவர்கள் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை நியூசிலாந்தில் சந்திக்கவுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள், ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. இதில் நசீர் அசீஸ் 60 ஓட்டங்களையும், அம்ஜத் ஜாவிட் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்களையும் ஜெரோம் ரெய்லர் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 30.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
இதில் ஜோன்சன் சார்ல்ஸ் 55 ஓட்டங்களையும் ஜொனதன் கார்டர் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றனர். மஞ்சுல குருகே மற்றும் அம்சட் ஜாவிட் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago