George / 2015 மார்ச் 15 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி லீக் ஆட்டத்தில் 7விக்கெட்டுக்களால் அயர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
அடிலெய்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(15) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, அணித்தலைவர் போர்ட்டர் பீல்டின் சதத்துடன் 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் 237 ஓட்டங்களுக்கு இழந்தது.
238 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 46.1 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றிப்பெற்றது.
பாகிஸ்தான் அணி வீரர் சப்ராஷ் அஹமட் 124 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 101 ஓட்டங்களை குவித்தார்.
71 பந்துகளை எதிர்கொண்ட அஹமது சிஹாட் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 63 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
போட்டி நிறைவடையும் சந்தர்ப்பத்தில் உமர் அக்மல் 20 ஓட்டங்களுடனும் சப்ராஷ் அஹமட் 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago