2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

பாகிஸ்தானை வெல்ல நல்ல சந்தர்ப்பம்: சஹிப் அல் ஹசன்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாத இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் தமக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என சஹிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் தொடருக்காக கொல்கொத்தா சென்ற வேளையிலேயே இந்த கருத்தை கூறியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே தான் விளையாடவுள்ளதாகவும் பின்னர் நாடு திரும்பி அணியுடன் இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த தொடர் ஆரம்பிக்கும் வேளையிலேயே தமக்கு வாய்ப்பான தொடராக இந்த தொடரை அமைப்பது தமக்கு வெற்றிக்கான அதிக வாய்ப்புகளை வழங்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

பாகிஸ்தான் அணியுடன் 32 போட்டிகளில் விளையாடி பங்களாதேஷ் அணி ஒரு தடவை மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் அனைத்து அணிகளையும் வெற்றி பெற்றுள்ளோம். நியூசிலாந்து அணியை 7 தடவைகள் வென்றுள்ளோம். அவர்கள் இன்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளது என்று மேலும் கூறியுள்ளார். முக்கிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா அணிகளை சந்திக்கவுள்ளது. அடுத்த உலகக்கிண்ண தொடரில் 10 அணிகள் பங்குபற்றவுள்ள நிலையில் இந்த வருடம் முக்கிய வருடம். தரப்படுத்தல்கள் முக்கியம். இந்த அணிகளை வெற்றி பெறுவதன் மூலமே அதிக புள்ளிகளைப் பெறமுடியும். அதன் மூலம் ஒன்பதாமிடத்தில் இருந்து முன்னோக்கி செல்ல முடியும் என சஹிப் அல் ஹசன் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .