2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விமர்சனங்கள் வலிக்கிறது: கோலி

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 11 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண தொடரின் அரை இறுதிப் போட்டியில் விராத் கோலி மோசமாக துடுபாடியமைக்கு ஊடகங்களும் ரசிகர்களும் விமர்சித்தமைக்கு இந்திய அணியின் துடுபாட்ட வீரர் விராத் கோலி, தனது பதிலைக் கூறியுள்ளார். 

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்குபற்ற முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார் கோலி, தன்னை விமர்சித்தது தனக்கு பெரும் அதிருப்தியையும் வருத்தத்தையும் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக தனது தோல்விக்கு தனது தனிப்பட்ட வாழ்வையும் தனது காதலி அனுஷ்கா ஷர்மாவை விமர்சித்ததும் தனக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என மேலும் கூறியுள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்து வருகின்றேன். ஒரு போட்டியில் தோல்வியடைந்தமைக்கு இந்தளவுக்கு விமர்சனம் செய்தமை மிகப் பெரியளவில் எனக்கு அதிருப்தியை வழங்கியுள்ளது. இதன் மூலம் பலர் மீது இருந்த நம்பிக்கை இப்போது இழந்து போய்விட்டது. இது ஒருவகையில் நல்லதே. யார் யார் எவ்வாறானவர்கள் என்பதை அறிந்து கொண்டுள்ளேன். இந்த விடயங்கள் என்னைத் தாண்டி நடக்கும் கஷ்டமான விடயங்கள். இவற்றை என்னால் தடுக்க ஏலாது. ஆனால் வலிக்கிறது என மேலும் அவர் கூறியுள்ளார்.

நானும் ஒரு மனிதன் என்ற நிலையில் காயப்பட்டுவிட்டேன். இந்த கருத்துக்களை கூறியவர்களும் விமர்சித்தவர்களும் வெட்கப்படவேண்டியவர்கள். நான் எப்போது நல்ல போர்மில் இருக்கின்றேன், இல்லை என்பது என்னிலும் பார்க்க உங்களுக்கு நன்கு தெரியும். நான் எனது வாழ்க்கையில் எப்போதும் இல்லாதவாறு இப்போது நம்பிக்கையாக இருக்கின்றேன். இவ்வளவு நாளும் இவை எல்லாம் அடங்கட்டும் என சத்தமில்லாமல் இருந்தேன். இன்று பகிரங்கமாக இவற்றை கூறியுள்ளேன் என்று இந்திய டெஸ்ட் அணித் தலைவர் விராத் கோலி தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .