2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஜூன் மாதம் இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி

A.P.Mathan   / 2015 மே 11 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு T20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளதை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. 

டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மைதான ஒழுங்குகளில் மாத்திரம் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்த டெஸ்ட் போட்டிகள் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி காலியியும், இரண்டாவது போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்திலும், மூன்றாவது போட்டி பல்லேகலயிலும் நடைபெறவுள்ளன.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டிகள் காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் மேலதிக நாட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

T20 போட்டிகள் ஜூலை 30 மற்றும் ஓகஸ்ட் முதலாம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்தத் தொடருக்கு முன்னதாக, இலங்கை வரும் பாகிஸ்தான் அணி 3 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியொன்றில் கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் விளையாடவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .