George / 2015 மே 28 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிளெவ்லான்ட் கவாலியர்ஸ் அணி 118க்கு 88 என்ற புள்ளி அடிப்படையில் அட்லாண்டா ஹவாக்ஸ் அணியை தோற்கடித்து 4க்கு பூச்சியம் என்ற அடிப்படையில் கிழக்கு பிராந்திய இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக என்பிஏ இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
மேற்படி போட்டியில் அதிகூடிய புள்ளிகளாக 23 புள்ளிகளை பதிவுசெய்த லீபுரோன் ஜேம்ஸ் 6வது தடவையாக என்பிஏ இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுகிறார். அத்துடன் தொடர்ச்சியாக 5 தடவை இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுகிறார். மேலும் இப்போட்டியில் 7 தடவை புள்ளிகள் பெறுவதற்கு உதவி செய்தும், 9 தடவை மீண்டுவந்த பந்தை செலுத்தியுமிருந்தார் லீபுரோன்.
ஜூன் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகும் என்பிஏ இறுதிப்போட்டியில் கோல்டன் ஸ்டேட் வரியர்ஸ் அல்லது ஹௌஸ்டன் ரொக்கெட்ஸ் அணியுடன் கிளெவ்லான்ட் கவாலியர்ஸ் அணி மோதவுள்ளது.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago