2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

குஷாலுக்கு மீண்டும் இலங்கை அணியில் இடம் கிடைக்கும்: களு

A.P.Mathan   / 2015 ஜூன் 02 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குஷால் ஜெனித் பெரேரா, அஷான் பிரியரஞ்சன், கித்ருவான் விதானகே ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணியில் முழுமையான இடங்களைப் பிடிப்பார்கள் என இலங்கை A கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ரொமேஷ் கழுவித்தாரண தெரவித்துள்ளார். 

இலங்கை அணியின் வீரர்களான குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர் அவர்களின் இடங்களை இந்த வீரர்கள் பிடிப்பார்கள் என களுவித்தாரண நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த மூவருக்கும் இலங்கை அணியில் போதியளவு வாய்ப்பு வழங்கிய போதும் அவர்கள் சோபிக்க தவறியமையினால் அணியால் நீக்கப்பட்டனர். 

பாகிஸ்தான் A அணியுடனான தொடரில் இலங்கை A அணி 2 - 1 என்ற ரீதியில் 50 ஓவர்களை தொடரை வெற்றி கொண்டது. இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இந்த தொடரில் வீரர்களும் நல்ல முறையில் குஷால் ஜெனித் பெரேரா, கித்ருவான் விதானகே ஆகியோர் நல்ல திறைமைகளை வெளிக்காட்டியுள்ளனர். அஷான் பிரியரஞ்சன் சோபிக்கத்தவறிய போதும், மிக விரைவில் சிறப்பாக செயற்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். 

குஷால் ஜெனித் பெரேரா இந்த தொடரில் நான்கு சதங்களைப் பெற்றுள்ளார். இதில் மூன்று ஆட்டமிழக்காமல் பெற்றவை. ஒரு போட்டியில் 87 ஓட்டங்களையும், ஒரு போட்டியில் 90 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். மீண்டும் அணியில் இடம் பிடிக்க இந்த ஓட்டங்கள் போதுமானவை என்று திடமாக சொல்ல முடியும். இவர் இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 4 போட்டிகளில் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார். இந்த 10 போட்டிகளிலும் 130 ஓட்டங்களையே இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .