A.P.Mathan / 2015 ஜூலை 10 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது. மிர்பூரில் நடைபெறவுள்ள தொடரின் முதலாவது போட்டி பகல் இரவுப்போட்டியாக இடம்பெறவுள்ளது.
தென்னாபிரிக்காவுடனான டி-20 தொடரை இரண்டுக்கு பூச்சியம் என்று இழந்திருந்தாலும், பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரை மூன்றுக்குப் பூச்சியம் என்ற நிலையிலும், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரை இரண்டுக்கு ஒன்று என்றவாறும் கைப்பற்றியிருக்கும் பங்களாதேஷ் அணி, இன்றைய போட்டியிலும் நம்பிக்கையோடு களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியின்போது பந்துவீசுவதற்கு அதிக நேரத்தை தென்னாபிரிக்கா எடுத்துக்கொண்டமையினால், தென்னாபிரிக்க அணித்தலைவர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஒரு போட்டித் தடைக்கு முகம்கொடுத்து, பங்களாதேஷ் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எனவே, அதனையும் கருத்தில்கொண்டு அவருக்கு இந்த ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வளிக்க தென்னாபிரிக்க அணி முகாமைத்துவம் தீர்மானித்தது. அதனையடுத்து தென்னாபிரிக்க ஒருநாள் அணிக்கு ஹஷிம் அம்லா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.பி.டி.வில்லியர்ஸ் இல்லாத தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்வது பங்களாதேஷ் அணிக்கு சாதகத்தன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேவேளை 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் தொடருக்கு தகுதிபெறவும் இந்தத் தொடரில் பெறப்படும் வெற்றிகள் முக்கியமானவை என்பதால் பங்களாதேஷ் அணி மிகுந்த போராட்டக்குணத்தை வெளிப்படுத்த முயலும்.
ஐ.சி.சியினால் புதிய ஒருநாள் போட்டித்தொடர் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டபின்னர் விளையாடப்படும் போட்டி இது என்பதால் மைதானத்தில் சில குழப்பங்கள் வீரர்களுக்கும், நடுவர்களுக்குமிடையில் இன்றைய போட்டியின்போது ஏற்படக்கூடும்.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகிறது.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago