Shanmugan Murugavel / 2015 ஜூலை 22 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த பெண்கள் ஆஷஸ் தொடரில், அதன் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பாக எலைஸ் பெரி 96 பந்துகளில் 78 ஓட்டங்களையும், அலெக்ஸ் பிளக்வெல் 84 பந்துகளில் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக, கத்தரின் பிரன்ட் 3 விக்கெட்டுகளையும், கேற் குறொஸ், ஹீதர் நைற் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
239 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 45.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இங்கிலாந்து அணியின் நட்டாலி ஸ்சிவர் 75 பந்துகளில் 66, லிடியா கிறீன்வே 70 பந்துகளில் 53, சாரா டெய்லர் 30 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், எரிஸ் ஒஸ்போர்ண் 3 விக்கெட்டுகளையும், எலைஸ் பெரி, சாரா கொய்ற், கிறிஸ்டன் பீம்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் சிறந்த வீரராக, இங்கிலாந்தின் நட்டாலி ஸ்சிவர் தெரிவானார்.
3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி, 3 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றினைக் கருத்திற்கொண்டு, புள்ளிகளின் அடிப்படையிலேயே ஆஷஸ் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago