Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 04 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களையே பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியாவின் பதில் அணித்தலைவர் லோகேஷ் ராகுல் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
காயம் காரணமாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் விராட் கோலி இப்போட்டியில் பங்கேற்காத நிலையில் அவரை ஹனும விஹாரி பிரதியிட்டிருந்தார். தென்னாபிரிக்கா சார்பாக குயின்டன் டி கொக், வியான் முல்டரை கைல் வெரைன், டுவன்னே ஒலிவியர் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, மாயங்க் அகர்வால், ராகுல் மூலம் நிதானமான ஆரம்பத்தைப் பெற்றது. எனினும், மார்கோ ஜன்சனிடம் 26 ஓட்டங்களுடன் அகர்வாலை இழந்ததைத் தொடர்ந்து செட்டேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானேயை அடுத்தடுத்து ஒலிவியரிடம் இழந்தது.
பின்னர் ராகுலும், விஹாரியும் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில் 20 ஓட்டங்களுடன் ககிஸோ றபாடாவிடம் விஹாரி வீழ்ந்ததோடு, 50 ஓட்டங்களுடன் ஜன்சனிடம் ராகுல் வீழ்ந்தார். றிஷப் பண்டும், இரவிச்சந்திரன் அஷ்வினும் ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் 17 ஓட்டங்களுடன் ஜன்சனிடம் பண்ட் வீழ்ந்ததுடன், உடனேயே ஷர்துல் தாக்கூரும் ஒலிவியரிடம் வீழ்ந்திருந்தார்.
மொஹமட் ஷமி, றபாடாவிடம் விழ, 46 ஓட்டங்களுடன் அஷ்வினும் ஜன்சனிடம் வீழ்ந்திருந்தார். இறுதியாக றபாடாவிடம் சிராஜ் விழ, சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 202 ஓட்டங்களை இந்தியா பெற்றிருந்த நிலையில், ஜஸ்பிரிட் பும்ரா ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா ஆரம்பத்திலேயே மொஹமட் ஷமியிடம் ஏய்டன் மார்க்ரமை இழந்தபோதும், நேற்றைய முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில், அணித்தலைவர் டீன் எல்கர் 11, கீகன் பீற்றர்சன் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago