2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

2ஆவது டெஸ்டில் வெற்றியை நோக்கி அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி அவுஸ்திரேலியா பயணிக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், மெல்பேணில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த இப்போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா, 51 ஓட்டங்களுடன் ட்ரெவிஸ் ஹெட்டை அன்றிச் நொர்கியாவிடம் இழந்ததோடு, அடுத்து வந்த வோர்னரும் மேலும் ஓட்டங்களைச் சேகரிக்காது நொர்கியாவிடம் வீழ்ந்ததுடன், அணித்தலைவர் பற் கமின்ஸூம் ககிஸோ றபாடாவிடம் வீழ்ந்தார். பின்னர் சிறிது நேரத்தில் நேதன் லையனும் லுங்கி என்கிடியிடம் வீழ்ந்தார்.

இந்நிலையில், 111 ஓட்டங்களைப் பெற்ற அலெக்ஸ் காரி மார்கோ ஜன்சன்னிடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து 8 விக்கெட்டுகளை இழந்து 575 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் பெற்ற அவுஸ்திரேலியா தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. களத்தில், வெடிப்புற்ற விரலுடன் துடுப்பெடுத்தாடிய கமரொன் கிறீன் 51 ஓட்டங்களுடனும், மிற்செல் ஸ்டார்க் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலிருந்தனர்.

பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா, மழையால் முன்னரே நேற்றைய மூன்றாம் நாள் முடிவுக்கு வருகையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவின் முதலாவது இனிங்ஸை விட 371 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

களத்தில் சரெல் எர்வீ ஏழு ஓட்டங்களுடனும், தெனியுஸ் டி ப்ரூன் ஆறு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை கமின்ஸ் வீழ்த்தியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X