2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

3 மாதங்களுக்கு ஓ ருர்க் இல்லை

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதுகுப் பகுதி உபாதை காரணமாக குறைந்தது மூன்று மாதங்களுக்கு நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் வில் ஓ ருர்க் விளையாட முடியாது.

இதேவேளை வலது காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக துடுப்பாட்டவீரர் பின் அலென்னும் மூன்று மாதங்களுக்கு விளையாட முடியாது.

இந்நிலையில் அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக சகலதுறைவீரர் கிளென் பிலிப்ஸ் அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை தவறவிடவுள்ளார்.

இதேவேளை அடிவயிற்று சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மிற்செல் சான்ட்னெரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர் பென் சியர்ஸ் காயத்திலிருந்து குணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .