Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடருக்கு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக இத்தாலி தகுதி பெறத் தவறியுள்ளது.
பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியாவின் மைதானத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற அந்நாட்டுடனான தகுதிகாண் போட்டியில் தோற்றே உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை இத்தாலி இழந்தது.
இப்போட்டியின் மேலதிக நேர முடிவிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், பெனால்டியில் 1-4 என்ற ரீதியில் தோல்வியடைந்தே உலகக் கிண்ணத்துக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இத்தாலி இழந்தது.
மறுபக்கமாக கொஸோவாவில் நடைபெற்ற அந்நாட்டுடனான தகுதிகாண் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற துருக்கி 24 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.
இதேவேளை தம்நாட்டில் நடைபெற்ற போலந்துடனான தகுதிகாண் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கிண்ணத்துக்கு சுவீடன் தகுதி பெற்றது.
இந்நிலையில் செச்சினியாவில் நடைபெற்ற அந்நாட்டுடனான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் பெனால்டியில் தோற்ற டென்மார்க், உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது. போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்ததோடு, மேலதிக நேர முடிவில் இரண்டு அணிகளும் மேலும் ஒவ்வொரு கோலைப் பெற்று 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டன. பின்னர் 1-3 என்ற ரீதியில் பெனால்டியில் தோல்வியடைந்தே உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை டென்மார்க் இழந்தது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago