Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றுள்ள அவுஸ்திரேலியா, அடிலெய்ட்டில் புதன்கிழமை (17) ஆரம்பமான இந்த டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்து எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் ஜொஃப்ரா ஆர்ச்சரிடம் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகெளையும் இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றது. மிற்செல் ஸ்டார்க் 54 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து, அணித்தலைவர் பற் கமின்ஸ் (3), நேதன் லையன் (2), கமரன் கிறீன், ஸ்கொட் போலண்டிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 45, ஆர்ச்சர் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.
8 minute ago
23 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
1 hours ago
2 hours ago