Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 28 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, 4-1 என்ற ரீதியில் இங்கிலாந்து வென்றுள்ளது.
பேர்த்தில் இன்று இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் 12 ஓட்டங்களால் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜோ ரூட் 62 (68), ஜேஸன் றோய் 49 (46), ஜொனி பெயார்ஸ்டோ 44 (48), அலெக்ஸ் ஹேல்ஸ் 35 (47) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அன்ரூ டை 5, மிற்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 260 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 48. 2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 87 (99), கிளென் மக்ஸ்வெல் 34 (39), டிம் பெய்ன் 34 (44) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டொம் குரான் 5, மொயின் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக டொம் குரான் தெரிவானதோடு, இத்தொடரின் நாயகனாக ஜோ றூட்டும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago