2025 மே 19, திங்கட்கிழமை

95 ஓட்டங்களுக்குள் சுருண்ட தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 18 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களையே தென்னாபிரிக்கா பெற்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் பதில் அணித்தலைவர் டொம் லேதம் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். தென்னாபிரிக்கா சார்பாக துடுப்பாட்டவீரர் சரெல் எர்வீ அறிமுகத்தை மேற்கொண்டதுடன், டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர் கிளென்டன் ஸ்டுர்மன் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, மற் ஹென்றியிடம் அடி பணிந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 95 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், ஸுபைர் ஹம்ஸா 25 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ஹென்றி 7 மற்றும் டிம் செளதி, கைல் ஜேமிஸன், நீல் வக்னர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து, நேற்றைய முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில், ஹென்றி நிக்கொல்ஸ் 37, நீல் வக்னர் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். டெவோன் கொன்வே 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில், டுவன்னே ஒலிவியர் 2, மார்கோ ஜன்சன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X