2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அடுத்த சுற்றில் பார்சிலோனா, அத்லெட்டிகோ

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுகளுக்கு, பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.

றியல் முர்சியா அணியுடனான இறுதி 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற பார்சிலோனா, நேற்று  இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்று, 8-0 என்ற மொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது.

எல்சே அணியுடனான இறுதி 32 அணிகளுக்கான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முதலாவது சுற்றுப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, 4-1 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு அத்லெட்டிகோ மட்ரிட் தகுதிபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .