2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அடுத்த மாதம் ஆரம்பிக்கிறது ஐ.பி.எல்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 07 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்), அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், இறுதிப் போட்டி இவ்வாண்டு மே மாதம் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

தொடரின் முதலாவது போட்டியில், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரை நடப்புச் சம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் சென்னையில் எதிர்கொள்ளவுள்ளது.

தகுதிகாண் போட்டிகளும், இறுதிப் போட்டியும் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அனைத்துப் போட்டிகளும் குறிப்பிட்ட இரண்டு அணிகளுக்கும் பொதுவான இடங்களிலேயே இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .