Shanmugan Murugavel / 2021 மே 10 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான எடின்சன் கவானி, யுனைட்டெட்டில் இருப்பதை நீடித்துள்ளதாக அக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்தாண்டு வரையில் யுனைட்டெட்டில் இருக்கும் வண்ணம் புதிய ஓராண்டு ஒப்பந்தமொன்றில் கவானி கைச்சாத்திட்டுள்ளார்.
பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில், யுனைட்டெட்டில் கவானி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இப்பருவகாலத்தில் 35 போட்டிகளில் 15 கோல்களை கவானி பெற்றிருந்தார்.
கட்டாரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன உலகக் கிண்ணத் தொடருக்கான உருகுவே குழாமில் இட்டம்பெற எதிர்பார்த்துள்ள கவானிக்கு, பிறீமியர் லீக்கில் தொடருவது உதவுமெனக் கருதப்படுகிறது.
25 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
50 minute ago