Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய இருபதுக்கு-20 அணியின் தலைவர் ஆரொன் பின்ச், தனது அணித்தலைமையைப் பொறுப்பை, டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்திடம் இழக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அவர் அவ்வாறு இழப்பாராயின், அணியில் அவரது இடமும் கேள்விக்குள்ளாகவுள்ளது.
தற்போது காயமடைந்துள்ள பின்ச், இந்தியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 உலகத் தொடருக்கு முன்னதாகக் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், நாளை அறிவிக்கப்படவுள்ள அவுஸ்திரேலியக் குழாமில், அணித்தலைமையை அவர் இழப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம், டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும், அவுஸ்திரேலியத் தலைவராக ஒரே நேரத்தில் செயற்பட்ட பெருமையை, றிக்கி பொன்டிங்குக்குப் பின்னர், ஸ்டீவன் ஸ்மித் பெறவுள்ளார்.
அத்தோடு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உஸ்மான் கவாஜா களமிறங்க, மூன்றாம் நிலை வீரராக ஷேன் வொற்சன் களமிறங்கும் வாய்ப்பும் அவுஸ்திரேலியாவுக்குக் காணப்படும் நிலையில், அணியில் தனது இடத்தையும் இழக்கும் ஆபத்து, பின்ச்சுக்குக் காணப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .