Shanmugan Murugavel / 2025 நவம்பர் 24 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் தலைமை தாங்கவுள்ளார்.
வழமையான அணித்தலைவர் ஷுப்மன் கில் கழுத்துக் காயத்திலிருந்து குணமடைந்து வரும் நிலையிலும், உப அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் மண்ணீரல் கிழிவிலிருந்து குணமடைந்து வரும் நிலையிலேயே ராகுல் இந்திய அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.
இந்நிலையில் திலக் வர்மா, ருத்துராஜ் கைகவாட், றிஷப் பண்ட் ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ்ஜுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் அக்ஸர் பட்டேல் குழாமில் இடம்பெறவில்லை. இரவீந்திர ஜடேஜா குழாமுக்குத் திரும்பியுள்ளார்.
குழாம்: றோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜைஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, லோகேஷ் ராகுல் (அணித்தலைவர் & விக்கெட் காப்பாளர்), றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), வொஷிங்டன் சுந்தர், இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா, ருத்துராஜ் கைகவாட், பிரசீத் கிருஷ்ணா, அர்ஷ்டீப் சிங், துருவ் ஜுரேல்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago