Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
றியல் சார்பாக, கரிம் பென்ஸீமா, மார்கோ அஸென்ஸியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, ஒஸஸுனாவின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், பார்சிலோனாவுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. பார்சிலோனா சார்பாக, நிகோ கொன்ஸலேஸ், அப்டே எஸ்ஸல்ஸுலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஒஸஸுனா சார்பாக டேவிட் கர்சியா, எஸெக்கியல் அவிலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
21 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago