2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

அன்டி மறேயை தோற்கடித்து இறுதிக்குள் நுழைந்தார் நடால்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொன்டி கார்லோ மாஸ்டேர்ஸ் பட்டத்தை எட்டுத் தடவைகள் வென்றிருந்த உலகின் ஐந்தாம் நிலை வீரரான ரஃபேல் நடால், உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மறேயைக்கெதிராக ஒரு செட் பின்தங்கியிருந்தாலும் சுதாகரித்துக் கொண்டு அவரைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இரண்டு மணித்தியாலங்களும் 44 நிமிடங்களும் நீடித்த இப்போட்டியில் 2-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அன்டி மறேயை ரஃபேல் நடால் தோற்கடித்தார். இப்போட்டியுடன் சேர்த்து அன்டி மறேயை எட்டு தடவை களிமண் தரையில் சந்தித்து ஏழு தடவைகள் ரஃபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.

இத்தொடருடன் சேர்த்து 100ஆவது தடவையாக தொழில்முறைசார் டென்னிஸ் வீரர்களின் கூட்டமைப்பின் உலக சுற்றுலா இறுதிக்கு வந்துள்ள ரஃபேல் நடால், உலகின் 16ஆம் நிலை வீரரான பிரான்ஸின் கயேல் மொன்பில்ஸை இறுதிப் போட்டியில் சந்திக்கிறார். கயேல் மொன்பில்ஸ், 6-1, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான ஜோ-வில்பிரைட் சொங்காவை தோற்கடித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .