2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

அன்ட்ரே றசலுக்கு 2 ஆண்டுத் தடை?

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 03 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் அன்ட்ரே றசலுக்கு, கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. ஊக்கமருந்துச் சோதனைகளில் பங்குபற்றாமை காரணமாக, அவருக்கு இந்தத் தடை விதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஊக்கமருந்துக்கெதிரான ஜமைக்க ஆணைக்குழுவின் கருத்தின்படி, 12 மாதகாலப்பகுதியில், ஊக்கமருந்துச் சோதனைக்கான 3 சோதனைகளை, அன்ட்ரே றசல் தவறவிட்டுள்ளார். இது, ஊக்கமருந்துக்கெதிரான விதிகளின்படி, ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கியதாகக் கருதப்படும்.

'றசலின் மீறல் குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் எமக்குத் தகவல் கிடைத்தது. அவரது விடயம் தொடர்பாகக் கேட்பதற்கு, குழுவொன்றை நியமித்துள்ளேன்" என, ஜமைக்க ஊக்கமருந்துக்;கெதிரான ஆணைக்குழுவின் சுயாதீன ஒழுக்காற்றுச் சபைத் தலைவர் கென்ட் பான்ட்ரி தெரிவித்தார்.

இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக விளையாடுவதற்கு அன்ட்ரே றசல் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அவ்வணியின் முக்கியமான வீரராகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .