Mithuna / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பெல்ஜியக் கழகமான றோயல் அன்ட்வெர்ப்பின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா தோற்றது.
இதேவேளை, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதையடுத்து விலகல் முறையிலான சுற்றுக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதி பெற்றது.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான லேஸியோவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
21 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
46 minute ago