2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அமீரகத்தில் ஆசியக் கிண்ணம்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 27 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையே நடாத்துகிறது.

இந்தியா, பாகிஸ்தான், அமீரகம், ஓமான் ஆகியன குழு ஏயிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹொங் கொங் ஆகியன குழு பியிலும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் அவற்றுக்குள் மோதி முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அந்த நான்கு அணிகளுக்குள் போட்டிகள் இடம்பெற்று முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .