2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

அமீரகத்தை வென்ற பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 31 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஷாஜாவில் சனிக்கிழமை (30) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை பாகிஸ்தான் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சைம் அயூப்பின் 69 (38), ஹஸன் நவாஸின் 56 (26), மொஹமட் நவாஸின் 25 (15), பஹீம் அஷ்ரஃப்பின் 16 (10) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஹைதர் அலி 4-0-32-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தார்.

பதிலுக்கு 208 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஐ.அ. அமீரகம் சார்பாக ஆசிஃப் கான் 77 (35), முஹமட் வஸீம் 33 (18) ஓட்டங்களைப் பெற்றபோதும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களையே பெற்று 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் நவாஸ் 4-0-21-2, அயூப் 2-0-6-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக அயூப் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .