2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

அமோரிம்மை பதவிநீக்கிய மன்செஸ்டர் யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 06 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளர் ருபென் அமோரிம் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு நொவெம்பரில் பதவியேற்ற அமோரிம்மின் முதலாவது பருவகாலத்தில் 15ஆவது இடத்திலேயே பிறீமியர் லீக்கை யுனைட்டெட் முடித்திருந்தது. இப்பருவகாலத்தில் 20 போட்டிகளின் முடிவில் ஆறாமிடத்தில் யுனைட்டெட் காணப்படுகின்றது.

யுனைட்டெட்டின் முகாமைத்துவத்துடன் அணி விளையாடும் பாணி, வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவது  குறித்து அமோரிம் முரண்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .