Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 31 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பிறிஸ்பேர்ணில் இன்று நடைபெற்ற அயர்லாந்துடனான குழு ஒன்று சுப்பர் 12 போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அயர்லாந்தின் அணித்தலைவர் போல் பிரையன், தமதணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அணித்தலைவர் ஆரோன் பின்ஞ்சின் 63 (44), மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் 35 (25), மிற்செல் மார்ஷின் 28 (22) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், பரி மக்கார்தி 4-0-29-3, ஜொஷ் லிட்டில் 4-0-21-2, ஜோர்ஜ் டொக்ரல் 4-0-24-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 180 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களையே பெற்று 42 ஓட்டங்களால் தோல்வியடைந்து. துடுப்பாட்டத்தில், லொர்கன் டக்கர் ஆட்டமிழக்காமல் 71 (48) ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்துவீச்சில், அடம் ஸாம்பா, கிளன் மக்ஸ்வெல், பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக ஆரோன் பின்ஞ் தெரிவானார்.
3 minute ago
28 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
28 minute ago
34 minute ago
50 minute ago